சென்னை : ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரமலான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிக்க, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம், மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அனுமதி பெற்ற பள்ளிவாசல்கள், தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவர்.
ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க, 3,801 டன்கள் அரிசியை, தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளும், இம்மாதம் 29ம் தேதியே தயாராக வைத்திருக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, தமிழகத்தில் அனுமதி பெற்று, ஏற்கனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் பள்ளிவாசல்கள், மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட கலெக்டரிடம் பெற்று, நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து அரிசியைப் பெறலாம் என, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி . தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக