அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 ஜூலை, 2011
குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம்
புதுடெல்லி:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஆகியவற்றை மாநில உளவுத்துறை (எஸ்.ஐ.பி) அழித்ததன் பின்னணியில் மாநில அரசின் க்ரிமினல் சதித்திட்டம் உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் 2007-ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் மோடியின் அரசு தெரிவித்திருந்தது. இது க்ரிமினல் சதித்திட்டத்தை தவிர வேறொன்றுமில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார். உண்மையை மூடிமறைப்பதற்கான முயற்சி என்பது அரசின் நடவடிக்கை மூலம் தெளிவாகிறது.
உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்படும், குஜராத் அரசின் சந்தேகத்தை ஏற்படுத்தும் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை அழித்ததாக கூறுவது பரிகாசமாமும். ஆவணங்களை அழித்ததன் மூலம் இனப்படுகொலையில் அரசின் பங்கு நிரூபணமாகிறது என மனீஷ் திவாரி கூறினார்.
குஜராத் இனப்படுகொலை நடந்த வேளையில் எஸ்.ஐ.பி (மாநில உளவுத்துறை) அதிகாரிகளின் மூவ்மெண்ட் பதிவேடு, வாகனங்களின் லாக் புக் (சிற்றேடு), தொலைபேசி உரையாடல்களின் பதிவு ஆகியவற்றை அழித்துவிட்டதாக குஜராத் இனப்படுகொலையை விசாரித்துவரும் நானாவதி கமிஷன் முன்பு அரசு வழக்கறிஞர் சரத் வக்கீல் தெரிவித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக