சிறிய காரை அறிமுகப்படுத்த ஃபியட் ஆயத்தமாகி வருவதாக பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், ஃபியட் இதுவரை மூச்சு விடவில்லை.
இந்த நிலையில், சிறிய கார் அறிமுகம் பற்றி ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபியட் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் கபூர் சிறிய கார் திட்டம் பற்றி சில தகவல்களை மட்டும் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
" அடுத்த ஆண்டு சிறிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கார் பாலியோ ஹேட்ச்பேக் காரைவிட விலை குறைந்ததாக இருக்கும்.
இத்தாலி நாட்டின் டூரின் நகரிலுள்ள எங்களது கார் வடிவமைப்பு மையத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்திய சந்தைக்கு நிலவரத்துக்கு ஏற்ற வகையில் சிறிய காரை வடிவமைப்பதற்கு டெல்லியில் உள்ள எங்களது ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக