அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
17 ஜூலை, 2011
திப்பு சுல்தான் கட்டிய பள்ளிவாசலுக்கு ஆபத்து
எத்தனையோ மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்துவிட்டு மறைந்து போயுள்ளனர். அதில் சிலரே இன்றளவும் நாட்டு மக்களால் நினைக்கப்படுகின்றனர். அந்த வகையில் மாவீரன் திப்பு சுல்தான் போற்றப்படத்தக்கவர் களில் முதன்மையானவர். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்த மாவீரன் மறைந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மாமன்னர் திப்புசுல்தான் காலத்திய அரிய பொருட்கள் அவரது பரம எதிரிகளான பிரிட்டிஷ்காரர்கள் இன்றளவும், மிகுந்த எச்சரிக்கையுடன் பாது காத்து வைத்திருக்கின்றனர். விக் டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங் காட்சியகங்களில் பாதுகாக்கப் படுகின்றன.
திப்புசுல்தான் ஆட்சியின் முக்கிய கட்டடக் கலை சாதனை யான தரியா தவுலத், மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றவையாகும்.
இந்தியா முழுவதிலும் மட்டு மல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீரங்கப்பட்டினம் ஜும்மா மஸ்ஜிதை பார்வையிட வருவது வழக்கம். மஸ்ஜிதே அஃலா என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கபட்டினம் ஜும்மா மஸ்ஜித் 1784ம் ஆண்டு மாவீ ரன் திப்பு சுல்தானால் கட்டப் பட்டது. புதிதாக கட்டப் பட்ட பள்ளிவாசலின் முதல் தொழுகையை இமாமாக நின்று தொழவைத்தவர் மாமன்னர் திப்பு சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட அழகிய மினாராக்களைக் கொண்ட இந்த மஸ்ஜித் 200 ஏணிப் படிக்கட்டுகளைக் கொண்டது. இந்த மஸ்ஜித் வாயிலாக ஸ்ரீரங்கப்பட்டினத்தை முழுமையாக ஒரு பருந்து பார்வை பார்க்க முடியும்.
அத்தகையை சிறப்புமிக்க அந்த மஸ்ஜித் இன்று மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. மஸ்ஜித் நீண்ட நெடுங் காலமாகவே பராமரிக்கப்படவே யில்லை, தூண்களும் தளங்களும் சிதலமடைந்துவிட்டன என 65 வயது அப்துல் ஹாலிக் கூறுகிறார். எந்த அரசியல் கட்சியும் இது குறித்து கவலைப்படவும் இல்லை என்றார்.
இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய மஸ்ஜித் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு மஸ்ஜித் நிலை மேலும் மோசமடைந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்புறத்தில் மட்டும் வர்ணம் பூசப்படுகிறது. உள்புறங்களில் பராமரிப்பு செய்யப்படாதது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன. வெள்ளிக்கிழமை மட்டும் நிறைந்து வழியும் இந்த மஸ்ஜிதில் மற்ற நேரங்களில் வெறும் 10லிருந்து 15பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். காரணம் எந்தப் பகுதி இடிந்துவிழுமோ என்ற அச்சம்தான் என அங்குள்ள மதரஸா ஆசிரியர் கூறுகிறார்.
இந்த தேசத்தின் விடுதலைக்காக பெரும்போர்களை நடத்தி தனது உயிரைக் கூட தியாகம் செய்த மாவீரன் திப்புசுல்தான் கட்டிய மஸ்ஜித் பாழடைந்து வீழ்வதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போ கின்றனவா மத்திய மாநில அரசு கள்?
மாவீரன் திப்புசுல்தானின் வீர மரணத்திற்குப் பிறகு உடனடியாக அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் ஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜிதை நல்ல முறையில் பராமரிக்க உத்தர விட்டதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.
திப்புசுல்தான் பள்ளிவாசல் மீண்டும் பொலிவு பெறுமா? இந்தியாவில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 600 பள்ளி வாசல்களிலும் தொல்லியல் துறை யிலிருந்து விடுவிக்கப்படுவது எப்போது?
-அபுசாலிஹ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக