இந்த ஆண்டு பல்வேறு வசதிகள் கேட்டு, 20 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் அளவிற்கு கோரிக்கைகளை வைத்துள்ளனர். எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு, யாருக்கு நிதி ஒதுக்குவது என்றே தெரியவில்லை. எம்.பி.,க்கு எந்த அதிகாரமும் இல்லை. வெளியில் தான் பெரிய மாயத்தோற்றம் உள்ளது.லோக்சபா கூட்டத்தில் பேசவேண்டுமானால், படாதபாடு படவேண்டும்.ஊராட்சித் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் கூட, எம்.பி.,க்கு கிடையாது.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகள் இருந்தும், நாம் வைத்த கோரிக்கை எதையும் நிறைவேற்றித் தரவில்லை. மத்தியில் ஆளும் காங்., அரசிடமிருந்து நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக