அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
22 ஜூலை, 2011
கொள்ளுமேடு த.மு.மு.க. மற்றும் நெய்வேலி அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அல்லாஹ்வின் கிருபையால் கொள்ளுமேடு கிளை தமுமுகவின் சார்பில் நேற்று காலை 10 :00 மணி முதல் மாலை 4 :00 மணி வரை நெய்வேலி அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொள்ளுமேடு ஊராட்சி மன்றத் தலைவரும் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுகவின் செயலாளருமான N . அமானுல்லாஹ்
இம்முகாமுக்கு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
120 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களது கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.
தமுமுக கிளை தலைவர் எம்.சபீகுர் ரஹ்மான் தலைமையில்
கிளைக் கழக நிர்வாகிகளும் ஊழியர்களும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக