அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும் , சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – ஆல இம்றான்: 159
“நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான்” ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று அல்லாஹ் கூறுகிறான்.) -தாஹா: 43,44
- -”புகாரி” மற்றும் “முஸ்லிம்” ஆகிய கிரந்தங்களில் “மாலிக் இப்னு அல் ஹூவைரிஸ்” (ரழி) அவர்களின் அறிவிப்பில், சில ஸகாபாக்கள் நபியவர்களிடத்தில் 20 நாட்கள் தங்கியிருந்து மார்க்கக் கல்வியினை கற்றுக் கொண்டு தமது கோத்திரத்தினரிடம் திரும்பிச் செல்ல நாடியபோது, தாம் இவ்வளவு காலமும் நபியவர்களிடத்தில் கழித்த நாட்களில் நபியவர்கள் தங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப்பற்றிக் கூறும் போது: “அவர் அறிவாளியாகவும் கனிவானவராகவும் இருந்தார்” எனக் கூறினார்கள்.
- -நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக கனிவைக் கடைபிடிக்கும் எல்லா விடயங்களிலும் அழகு தென்படும், அது புறக்கணிக்கப்படும் எல்லா விடயங்களிலும் அசிங்கம் தென்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்
- நபியவர்கள், இந்த உம்மத்திற்கு தலைமை தாங்கக் கூடிய தலைவர்களுக்காகப் பிரார்த்திக்கும் போது… “இறைவா! எவர் எனது உம்மத்தின் பொறுப்பை ஏற்று, அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறாரோ அவருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பாயாக! மேலும், எவர் எனது உம்மத்தின் பொறுப்பை ஏற்று அவர்களுடன் கனிவாக நடந்து கொள்கிறாரோ அவருடனும் நீ கனிவாக நடந்து கொள்வாயாக!” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்
- கனிவாக நடந்து கொள்ளக்கூடிய சுபாவம் படைத்தவர்கள் பற்றி நபியவர்கள் கூறும் போது….. “எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்பட்டுள்ளதோ, அவருக்கு நலவில் இருந்தும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்படாது தடுக்கப்பட்டுள்ளதோ அவருக்கு நலவில் இருந்தும் ஒரு பங்கு தடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரழி) ஆதாரம்: திர்மிதி
- “அபூ தர்தா” (ரழி) அவர்கள்: “ஒருவரிடத்தில் மார்க்க அறிவுள்ளது என்பதற்கு சிறந்த அடையாளம் அவர் தனது வாழ்வில் கனிவாக நடந்து கொள்வதாகும்.”
- “ஹிஷாம் இப்னு உர்வா” (ரழி) அவர்கள் தனது தந்தையைத் தொட்டும் அறிவிக்கையில்: “ஞானத்தில் இருந்தும் எழுதப்பட்டுள்ள விடயமாவது: “கனிவு ஞானத்தின் தலையாய அம்சமாகும்.”
- “கைஸ் இப்னு அபீ ஹாஸிம்” (ரழி) அவர்கள்: “எவருக்கு உலகில் கனிவாக நடந்து கொள்ளக்கூடிய பாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அது அவருக்கு மறுமையில் பிரயோசனமளிக்கும்.”
- “வஹ்ப் இப்னு முனப்பிஹ்” (ரழி) அவர்கள்: “கனிவு அறிவுடன் இணைந்திருக்கும்.”
- எம்முன்னோர்களில் சிலர் கூறுகையில்: “ஈமானை அறிவு அலங்கரிக்கும் போது ஈமான் சிறப்படையும், அறிவை செயல் அலங்கரிக்கும் போது அறிவு சிறப்படையும், செயலை கனிவு அலங்கரிக்கும் போது செயல் சிறப்படையும், அறிவும் கனிவான சுபாவமும் இணைந்திருப்பதைவிட சிறந்தது எதுவும் இருக்கமுடியாது.”
- கனிவு சுவனத்தின் பால் இட்டுச் செல்லும்.
- கனிவு பூரணமான இஸ்லாத்திற்கும் ஈமானுக்கும் அடையாளமாகத் திகழும்.
- அல்லாஹ்வுடைய மற்றும் மனிதர்களுடைய அன்பு கிடைக்கும்.
- மனிதர்களுக்கு மத்தியில் அன்பு நிலவும்.
- கலவரமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம்.
- இன்மை மறுமை இன்பத்திற்கு உருதுணையாக இருக்கும்.
- ஒருவனின் மார்க்க அறிவுக்கும் நற்பழக்கவழக்கங்களுக்கும் சிறந்த ஆதாரமாகத் திகழும்.
-- நன்றி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக