முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.
டாட்டா நிறுவனதிதின் இத்திட்டத்தின் மூலம், ஏழை கிராம புற மக்களுக்காக, ஏழே நாட்களில் 20 சதுர மீட்டரில் அல்லது சுமார் 215 சதுர அடியில் சுமார் 32,000 ரூபாயில் தரமான வீடுகளை கட்டித்தரப்படும் என தெரிகிறது.
இதற்கு அடுத்த வகை வீடுகள் சுமார் 30 சதுர மீட்டர் அல்லது சுமார் 322 சதுர அடிகளில் சுமார் 42,000 ரூபாய்களில் வழங்கப்படும்.
இந்த வீடுகள் முன்கூட்டி புனையப்பட்ட (Pre-fabricated) பொருட்களால் உருவாக்கப்பட்ட, மேல் கூரை, கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை மேற்கூரையுடன் சேர்த்து ஒன்று கூடி கட்டவும், பின்னர் தேவைபட்டால் பிரித்து மற்றுமோர் இடத்தில் மீண்டும் கட்டவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறை தலைமை நிர்வாகி சுமிதேஷ் டாஸ், கூறுகையில், விலை குறைந்த வீடுகள் திட்டம் குறித்து மாநில அரசுகலுடனும், சனல் வாரியம் மற்றும் தேங்காய் நார் பொருட்கள் வாரியங்கள் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அடுத்ததாக சூரிய ஒளி மின்சாரம் வசதி கொண்ட வீடுகளை கட்டி விற்கவும் திட்டங்கள் இருப்பதாக கூறினார்.
குறித்த விலையில் வீடுகளை கட்டும் திட்டத்திற்கு, தோதுவான நிலம் கிடைத்தவுடன், இந்த திட்டததை விரைவில் தொடங்கவிருப்பதாக் டாடா ஸ்டீல் நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் சுமார் 30 இடங்களில் சோதனை அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு, ஆய்வுக்கு விடப்பட்டுள்ளன.
இதன் தொடக்கமாக அடிப்படையான வசதிகளை கொண்ட சுமார் 32000 ரூபாய் மதிப்புள்ள வீடுகளையும், அடுத்த கட்டமாக சுமார் 43,000 ரூபாய் மதிப்புள்ள வீடுகளையும் டாடா ஸ்டீல் நிறுவனம் கட்டி விற்க இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இப்போது வழங்கப்படும் கட்டிடங்களின் சராசரி ஆயுள் சுமார் 20 வருடங்களாக இருக்கும் எனவும், நாளடைவில் அதிக வீடுகளை காட்டும்போது, இந்த ஆயுட்கால அளவானது மென்மேலும் அதிகரிக்கும் வகையில் வீடுகள் காட்டப்படும் எனவும் தெரிகிறது.
நன்றி.தமிழ்.யுனிட்டி மீடியா நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக