மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒபேரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் மேற்கு தாதர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 21 பேர் பலியாகியுள்ளனர், 141 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் வேதனையைத் தருகிறது. இக்கொடூர சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் சர்வதேச பயங்கரவாதிகளா அல்லது உள்ளூர் பயங்கரவாதிகளா என்பதை முறையான விசாரணையின் மூலம் கண்டுபிடித்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் நான்டெட், மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் சங்பரிவார் தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சத்திற்கு வந்தும், அந்த அமைப்புகள் இதுவரை தடை செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்பதி-ருந்து மத்திய அரசு குண்டுவெடிப்பு வழக்குகளை எப்படிக் கையாள்கிறது என்பது விளங்கும். எனவே தற்போது குண்டுவெடிப்புகளில் இந்த அமைப்புகளுக்கு பங்குள்ளதா என்பதையும் விசாரணையின் ஒரு பகுதியாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். குண்டுவெடிப்பு சம்பவங்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக