இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்தவாரம் கைது செய்தது.
அத்துடன் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்தது.
இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு கொடுமைகள் அனுபவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் உடனடியாக
விடுவிக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இதுவரை இலங்கை கடற்படை செய்துவந்த அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கச்சத்தீவை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு எடுக்கவேண்டும் என்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இந்திய பிரதமருக்கு தந்தி அனுப்பினார்.
மேலும் கடத்தப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும், கச்சத்தீவை மீட்கக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று 30.06.2011 அன்று மண்டபத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபத்திற்கு வந்தனர். தாயகம் திரும்பிய மீனவர்களை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக