அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
19 ஜூலை, 2011
மத்திய பிரதேசத்தில் மனைவியின் ரத்தத்தை உறிஞ்சி 3 ஆண்டுகளாக குடித்த கணவர்
போபால், ஜூலை 18-
மனிதரின் ரத்தத்தை குடித்து உயிர் வாழும் பேய் களை சினிமா படங்களில் பார்த்து அதிர்ந்து இருக்கி றோம். ஆனால் அந்த கொடூரம் நிஜ வாழ்க்கையில் நடந்து இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஷிகார்புரா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் அகிர்வார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மகள் தீபா அகிர்வார் (22) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து மகேஷ் தனது மனைவி தீபாவின் கை நரம்பில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சினார். அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி குடித்தார்.
இது தொடர்ந்து நடந்தது. இதனால் வேதனையில் துடித்த அவர் தனது உடலில் இருந்து ரத்தம் எடுக்க மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரை அடித்து உதைத்த மகேஷ் இந்த விஷய்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். ரத்தத்தை குடிப்பதால் தனக்கு உடலில் தெம்பும் பலமும் கூடுவதாக அவர் கருதினார்.
எனவே, இந்த நிலை 3 ஆண்டுகள் நீடித்தது. இதற்கிடையே, கர்ப்பம் அடைந்த தீபா சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத் தார். சம்பவத்தன்று தனது குழந்தையை தோளில் சாய்த்தபடி தீபா தூங்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது மகேஷ் அவரது கையில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி எடுக்க முயன்றார்.
அப்போது, அவரிடம் இருந்து தப்பிய தீபா தனது தந்தை வீட்டுக்கு ஓடி வந்தார். நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரி வித்தார். இதை தொடர்ந்து மகேஷ் மீது படீரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். எனவே மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக