அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
20 ஜூலை, 2011
‘டாடாவின் அடுத்த அதிரடி’ – இந்திய சந்தையை கலக்க வரும் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் வாகனங்கள்!!!
முன்னதாக எரிவாயு(சிஎன்ஜி) மற்றும் பேட்டரி ஆகிய இரட்டை எரிபொருட்களில் இயங்கும், டாடாவின் ஹைபிரிட் பஸ்கள் மும்பை மற்றும் டெல்லி போக்குவரத்து கழகங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பேட்டரி தொழில்நுட்பத்தின் தேக்க நிலையால், அதை வைத்து இயங்கும் வாகனங்கள் ‘மேடான’ பகுதிகளுக்கு ஏறும் பொது ‘பேட்டரி’ விரைவில் தீர்ந்து விடும் நிலை உள்ளது. மேலும் பேட்டேரிக்களின் அளவும் அவற்றை பயன்படுத்துவதற்கு தடையாக உள்ளது.
இந்த சவால்களை வெற்றிகரமாக தீர்ப்பதற்கே, இரட்டை எரிபொருள் பயன்படுத்த வேண்டிய நிலையில், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் புதிய இரட்டை தொழில்நுட்பம் கொண்ட பேருந்துகளை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாகக முடிந்த பின்னர் இவ்வாண்டு இறுதிக்குள் இந்த புதிய பேருந்துகளை மும்பை போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்க டாடா மோட்டோர்ஸ் திட்டமிட்டுள்ளது.
மிகுந்த எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த புகை வெளியீடு போன்ற வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு உதிரிபாகங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் இந்த வகை பேருந்துகள் தற்போது விலை கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.
எனினும் சிஎன்ஜி பேட்டரி இரட்டை எரிபொருள் பேருந்துகளை விட டீசல் இரட்டை எரிபொருள் பேருந்துகளின் விலை குறைவாக இருக்கும் அதேநேரம் சந்தையில் அதிக தேவை இருந்து உற்பத்தி பெருகும் போது இவற்றின் விலை வெகுவாக குறியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நன்றி.தமிழ்.யுனிட்டி மீடியா நியூஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக