அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 ஏப்ரல், 2011
இறைச்சிக்கறியில் ஒளிந்திருக்கும் ஆபத்து
பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.
சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள் ?
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
புற்றுநோய் - 180 நாட்கள்.
காசநோய் - 90 நாட்கள்.
நன்றி.ஞானமுத்துமுகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!
முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.
முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.
முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.
குறைந்து கொண்டே வரும் இளைஞர்கள்! தலைவர்கள் அதிர்ச்சி
ஒரு பக்கம் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் அதேசமயம் மறுபக்கம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையிலும் நாம் இருவர் நமக்கொருவர் திட்டத்தைக் கைவிட தலைவர்கள் தயாராக இல்லை.
சென்ற ஆண்டு சீனாவில் மக்கள் தொகைக் கணக்கிடும் பணி துவங்கியது. அதன் முடிவுகள், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில கணக்கெடுப்புகள் சீன தலைவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. சீன மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி சீனாவின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில், துருக்கி அல்லது அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ் அல்லது ஓகியோ மாகாணங்களைச் சேர்த்தால் வரும் மக்கள் தொகை அளவுக்கு சமமாக உள்ளது. அதாவது, 74 கோடி அதிகரித்துள்ளது.
29 ஏப்ரல், 2011
1.30 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது பி.எஸ்.என்.எல்.,
சென்னை : ""தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம், "லேண்ட் லைன்' வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறோம்,'' என, பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 18 லட்சம், "லேண்ட் லைன்' வாடிக்கையாளர்களையும், 65 லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளோம். இது தவிர, பி.எஸ்.என்.எல்.,லின் பிராட்பேண்ட் இணைப்பை நான்கு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.
28 ஏப்ரல், 2011
அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள்
உலகில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் ஏராளமானவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதிக வயது வரை வாழ்கிறோம் என சாதனை படைத்திருக்கிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். அமெரிக்காவின் ஒகியோ நகரைச்சேர்ந்த றோன் மற்றும்
டொன் கல்யோன் எனப்படும் இருவருமே இவர்கள். இவர்கள் இவருவரும் அமெரிக்காவின் சென்.எலிசபெத் வைத்தியசாலையில் 28ம் திகதி ஒக்டோபர் மாதம் 1951ம் ஆண்டு பிறந்தார்கள். இடுப்பு ஒட்டப்பட்ட நிலையில் பிறந்த இவர்கள் இன்றுவரை எந்தவித பாதிப்புக்களும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.
டொன் கல்யோன் எனப்படும் இருவருமே இவர்கள். இவர்கள் இவருவரும் அமெரிக்காவின் சென்.எலிசபெத் வைத்தியசாலையில் 28ம் திகதி ஒக்டோபர் மாதம் 1951ம் ஆண்டு பிறந்தார்கள். இடுப்பு ஒட்டப்பட்ட நிலையில் பிறந்த இவர்கள் இன்றுவரை எந்தவித பாதிப்புக்களும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.
27 ஏப்ரல், 2011
துபாய்க்கு "பறக்கும்' ராமச்சேரி இட்லி :சுண்டி இழுக்கும் சூப்பர் சுவை காரணம்
நாகரீகம் வளர்த்த காலத்தில், "பிசா'வுக்கு மத்தியிலும் ஈடு கொடுத்து வருகிறது இட்லி. பெரும்பாலானோரின் காலை உணவு இட்லி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. காரணம், ஆவியில் வேக வைக்கப்படுவதும், உடலுக்கு கேடு விளைவிக்காததும் என்பது தான். இட்லிக்கு பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு, நாவில் கொண்டாடி, மறைந்து போன நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள ராமச்சேரி இட்லிக்கு, பல்லாண்டுகளாக மவுசு அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ., தொலைவில், தமிழக- கேரள எல்லையில் உள்ள குக்கிராமம் ராமச்சேரி. மொத்தமாகவே, 25 குடும்பங்கள் வசிக்கும் ஊரின் முக்கிய தொழிலே, இட்லி தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி
சிலர் பல்வேறு உடல் உபாதைகளுக்காக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது.
தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.
ஆய்வு குறித்து கூறுகையில், ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தனர்.
26 ஏப்ரல், 2011
கர்பப்பை இல்லாவிட்டாலுமா!
கர்பப்பை இல்லாவிட்டாலுமா!ஆமாம் ! ஏன்?ஏன் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
இத்தா. சுமார் 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் உருவமில்லா இறைவனால் அருளப்பட்டதாக அவனின் இறுதி தூதரான முஹம்மதால் கூறப்பட்ட பெண்களுக்கான சட்டங்களில் ஒன்றுதான் இத்தா. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், கணவன் இறந்த பின் அவனின் மனைவிகள் ஆகியோர் கட்டாயம் இத்தாவை கடைபிடிக்கவேண்டும். இத்தா என்ற அரபிச் சொல் தமிழில் காத்திருத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இறந்துபோன அல்லது தலாக் கொடுத்த கணவனின் கரு அவனது மனைவியின் கர்ப்பபையில் உருவாகியுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்காக பாதிக்கப்பட்ட பெண் 4 மாதம் 10 நாட்கள் காத்திருப்பதே இத்தாவாகும். இத்தாவின் காலகட்டங்களில் யாரையெல்லாம் ஒரு பெண்ணானவள் பார்க்க்க்கூடாது என்று இஸ்லாம் வரையறை செய்திருக்கிறதோ அவர்களையெல்லாம் பாராமல், எவ்வித அலங்காரங்களும் செய்துகொள்ளாது கணவனுடன் வசித்த வீட்டில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருக்கவேண்டும்.
மல்லிகையின் மகத்துவம்
மல்லிகைப் பூக்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.
ஓரிரு மல்லிகைப் பூக்களை தினமும் உட்கொண்டு வந்தால்உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, தேநீர் போல் அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் நீங்கும்.
மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கினால் சோர்வடையும் பெண்கடள, மல்லிகைப் பூவை நன்கு நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தி வந்தாலே போதும். சோர்வில் இருந்து விடுபடலாம்.
70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணியுடன் சக பயணியை அழைத்துச் செல்ல அனுமதி
தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று, 70 வயது பூர்த்தியான பயணி, தம்முடன் ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்கு ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும். இதற்கான தகுதி குறித்த விவரங்கள், www.hajcommittee.com என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது விண்ணப்பத்துடன், தாம் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்துடன், தனியே தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். ஹஜ் பயணத்தை அவர்கள் ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும், சக பயணிகள் தனியே பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹஜ் பயணிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி தேதி. இதில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
25 ஏப்ரல், 2011
தமிழகத்தின் கல்வி வியாபாரம்
கொளுத்தும் கோடை வெயிலிலும் வீழ்ச்சி யில்லா பங்குச்சந்தையாக கல்வி வியாபாரம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. கல்வி வியாபாரப் போட்டியில் தினசரி நாளிதழ்களின் முதல் பக்க தலைப்பு செய்தியையே பின்னுக்குத் தள்ளி விளம்பரமாய் முன்நிற்கிறது.
நீச்சல் குளம் இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் இருக்கி றது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. என்றெல்லாம் விளம்பரம் வெளியாகிறது. இது வெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு என்று தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு வியாபாரப் போட்டியில் தனியார் பள்ளிகளின் விளம்பரம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக் கிறோம். எங்கள் பள்ளியில் மாணவர்களை சேருங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமிருக்கிறது.
நீச்சல் குளம் இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் இருக்கி றது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. என்றெல்லாம் விளம்பரம் வெளியாகிறது. இது வெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு என்று தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு வியாபாரப் போட்டியில் தனியார் பள்ளிகளின் விளம்பரம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக் கிறோம். எங்கள் பள்ளியில் மாணவர்களை சேருங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமிருக்கிறது.
கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ள 13 வயது சிறுவன்: போலீஸ் கமிஷனர் பாராட்டு
குனியமுத்தூர், பி.கே.புதூரைச் சேர்ந்தவர் காசிப் அகமது; ஸ்டோர்கீப்பர். இவரது மகன் சமீம் காம்ரூன்(13). நிர்மல்மாதா பள்ளியில் படிப்பை துவக்கிய இச்சிறுவன், பிரசன்டேசன் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தான். கணிதம், ஆங்கிலம், பயாலஜி பாடங்களில் மட்டும் மிக்குறைவான மார்க் பெறுவதால், அடிக்கடி ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளானான். ஆனால், கம்ப்யூட்டரில் மகா கெட்டிக்காரனாக இருந்தான். தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, சிறுவனை வரவழைத்து விசாரித்தார். கம்ப்யூட்டரில் சிறந்த திறமை பெற்றிருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தவர், கணபதியில் உள்ள சுகுணா ரிப் பள்ளியில் சேர்த்துவிட உதவினார். பள்ளியில் சேர இரண்டு தேர்வுகளை எழுதியுள்ளான்.
24 ஏப்ரல், 2011
சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.
மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.
பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.
பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
நகங்கள் மீது தேவை கவனம்
பலர் முகத்தை அழகாக்கிக் கொள்வதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். ஆனால் நகங்களை கவனிக்காமலே விட்டுவிடுவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல்நிலையை நாம் நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் எனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை நகம் காட்டுகிறது. ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக நாம் மருத்துவரிடம் செல்லும் போது, சிலர் நம் கை விரல்களை பரிசோதிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சந்தேகிக்கும் நோய் நமக்கு ஏற்பட்டிருப்பின் அதற்கான ஆதாரம் நகங்களில் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ளத்தான்.
மிளகின் மருத்துவப் பயன்பாடு என்ன?
மிளகு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. அதன் மருத்துவப் பயன்பாடுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம். மிளகு, வெல்லம், பசுநெய் ஆகிய மூன்றையும் சேர்த்து லேகியமாக கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர தொண்டைப் புண் குணமாகும்.
சிறிது சீரகம், 5 மிளகு, கொத்துமல்லி சிறிது, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து சிறிய உருணடைகளாக்கி உலர்த்திக் கொள்ளவும்.
தேவையான போது இதில் ஒரு உருண்டையை கற்பூரவல்லி இலைச் சாற்றில் கலந்து உட்கொள்ள கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சளித் தொல்லை தீரும். ஈளை மற்றும் இருமல் இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலை காய்ச்சி, அதில் சிறிது மிளகையும், மஞ்சளையும் பொடியாக்கி கலந்து குடித்து வர 3 நாளில் குணம் கிட்டும்.
23 ஏப்ரல், 2011
ஓர் வஃபாத் செய்தி
நமதூர் ஜாமியா பள்ளிவாசல் முத்தவல்லியும், பக்கிர்முஹம்மது, நூர்முஹம்மது, ஒலிமுஹம்மது இவர்களின் தகப்பனார் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்.இன்று இரவு (23/4/2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத்
இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
22 ஏப்ரல், 2011
திபெத்தில் நடந்துள்ளது 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஆபரேஷன்
திபெத்தில் 1998-ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்தது. அந்த மண்டை ஓட்டை பிளந்து ஆபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன. மண்டை ஓட்டை பிளந்து ஆபரேஷன் செய்வது என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.
ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தபோது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிந்தது. அதாவது அந்த காலத்திலேயே ஆபரேஷன் நடந்து இருக்கிறது.
இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஆபரேஷன் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்தபோது இந்த தகவல் கிடைத்து உள்ளது.
திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை ஆபரேஷன் நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற டாக்டர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.
குஜராத் கலவரம்: "தெரிந்தே அனுமதித்தார் மோடி" மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
2002 ல் நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது, இந்து கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதாமைச்சர் நரேந்திர மோடி அப்போது காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
2002 பிப்ரவரி 27 ல் கோத்ரா ரயில் எரிக்கட்ட பின்னர், உடனடியாக சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளிடம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தங்களது கோபத்தை தீர்த்துக் கொள்ள இந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
இதுபோன்ற (கோத்ரா ரயில் எரிப்பு) சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க, முஸ்லீம்களுக்கு இந்த முறை பாடம் கற்றுக் கொடுப்பதற்கான உத்தரவை சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது என்று மோடி கூறினார்.
இந்துக்கள் மத்தியில் காணப்படும் மிக அதிக உணர்ச்சி கொந்தளிப்பு தவிர்க்க முடியாதது என்பதால், அவர்களை பழி தீர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மேலும் குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவும் தனது விசாரணையை சரியாக நடத்தவில்லை என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் அந்த மனுவில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
சாயல்குடி ம.ம.க.வினர் மீது கொலைவெறித் தாக்குதல்! திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க ம.ம.க. வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
முதுகளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாயல்குடி இருவேலியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது திமுகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் சாயல்குடி இருவேலி பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வந்தோரை வாக்குசாவடிக்குச் செல்லவிடாமல் திமுக கிளைச் செயலாளர் அம்சா தலைமையிலான திமுகவினர் தடுத்துள்ளனர். இதற்கு மனிதநேய மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவினரின் எதிர்ப்பை மீறி மக்கள் வாக்குசாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
மக்கள் வாக்களிப்பதை திமுகவினர் தடுத்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதினும் சாயல்குடி காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சையத் அபுதாகிர், அப்துல் ரஹ்மான், ஜபருல்லாஹ்கான் மற்றும் சாதிக் பாஷா ஆகியோர் மீது நேற்று இரவு திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பெயரளவில் சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு காரணமான இருவேலி திமுக கிளைச் செயலாளர் அம்சாவை உடனே கைது செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
தொடர்ந்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறை தலைமை இயக்குனரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
முதுகளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாயல்குடி இருவேலியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது திமுகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் சாயல்குடி இருவேலி பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வந்தோரை வாக்குசாவடிக்குச் செல்லவிடாமல் திமுக கிளைச் செயலாளர் அம்சா தலைமையிலான திமுகவினர் தடுத்துள்ளனர். இதற்கு மனிதநேய மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவினரின் எதிர்ப்பை மீறி மக்கள் வாக்குசாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
மக்கள் வாக்களிப்பதை திமுகவினர் தடுத்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதினும் சாயல்குடி காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சையத் அபுதாகிர், அப்துல் ரஹ்மான், ஜபருல்லாஹ்கான் மற்றும் சாதிக் பாஷா ஆகியோர் மீது நேற்று இரவு திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பெயரளவில் சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு காரணமான இருவேலி திமுக கிளைச் செயலாளர் அம்சாவை உடனே கைது செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
தொடர்ந்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறை தலைமை இயக்குனரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
21 ஏப்ரல், 2011
அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.
இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.
இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்?
கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் ‘ஸ்மாட்போன்’ விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நொக்கியாவுடன் இணைந்துள்ளதால் மைக்ரோசொப்டின் விண்டோசானது 3 ஆவது மிகப்பெரிய இயங்குதளமாக இருக்குமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
விரிவான பக்கம் கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.
இதனால் நமக்கு தேவையான கோப்புக்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கோப்புக்கள் பத்திரமாக encrypt பண்ணப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட Dropbox Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
நமது பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன: எச்சரிக்கை
மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.
மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storag…e Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.
இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.
பதிவர்களின் விவரங்களை விற்கும் ஃபேஸ்புக்!
எகிப்தில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிக்கு வித்திட்டதே ஃபேஸ்புக்தான் என்று ஒருபுறம் உலகம் அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் தனது பதிவர்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை விள்ம்பரதாரர்களிடம் விற்று காசுபார்ப்பதாக ஃபேஸ்புக் மீது புகார் கிளம்பியுள்ளது.
ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, 'ஹாபி' வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு 'பாஸ்' செய்து விற்றுவிடுகிறதாம் ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, 'ஹாபி' வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு 'பாஸ்' செய்து விற்றுவிடுகிறதாம் ஃபேஸ்புக்.
கேள்விக்குறியாகும் சுகாதாரம்
உலக அளவில் சுகாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இலக்கு இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது என்பதையே ஒவ்வொரு புள்ளிவிபரமும் நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நாளும் உலக அளவில் 7 ஆயிரம் சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என்று மருத்துவ ஏடு லான்செட் தனது ஆய்வறிக்கையில் தெரி வித்திருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் குழந்தை சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என புள்ளி விப ரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் குறிப்பாக இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 20 முதல் 66 குழந்தைகள் இறந்தே பிறக்கின்ற ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மணி நேரம் மின்வெட்டு தமிழ்நாட்டில் முடங்கும் தொழில்
தமிழகத்தில் மின்தட்டுப் பாடு தீவிரமாகியுள்ளது. இத னால் தினமும் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படு கிறது. இதனால் மாவட்டங்க ளில் உள்ள தொழிற்சாலைப் பணிகள் முடங்கி உள்ளன. மாநிலத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு இருப்பதால் அடிக் கடி மின் விநியோகம் தடை படுகிறது. சென்னையைத் தவிர, மாநிலத்தின் இதர மாவட்டங் களில் தினமும் 2 மணி நேரம் வீடுகளில் மின்தடை மேற் கொள்ளப்படுகிறது.
ஆனால் தூத்துக்குடி அல் லது கோயம்புத்தூர் நுகர்வோர் கூறுகையில், தினமும் 3-4 மணி நேரம் மின்தடை மேற்கொள் ளப்படுகிறது என்கிறார்கள்.
ஆனால் தூத்துக்குடி அல் லது கோயம்புத்தூர் நுகர்வோர் கூறுகையில், தினமும் 3-4 மணி நேரம் மின்தடை மேற்கொள் ளப்படுகிறது என்கிறார்கள்.
20 ஏப்ரல், 2011
வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதி துல்லியமாக கணக்கிட வலியுறுத்தல்
காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் அளவை துல்லியமாக கணக்கிட வேண்டும் என, விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், சென்னை நகர மக்களின் தாகத்தை தணிக்கும் ஜீவ நாடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோடை காலத்தில் கூட, வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
19 ஏப்ரல், 2011
அறிஞர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
“கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (12:76)
‘மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். (மூஸா அவர்களே!) உம்மை விடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?’ எனக் கேட்டதற்கு மூஸா(அலை) அவர்கள் ‘இல்லை!’ என்றார்கள். அப்போது இறைவன் ‘ஏன் இல்லை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறார்களே!” என்று மூஸா (அலை) அவர்களுக்கு அறிவித்தான்” (புகாரி)
மேற்கண்ட திருமறை வசனம் மற்றும் நபிமொழி ஆகியவற்றின் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றது.
மனிதர்களின் சிந்தனைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே ஒரு அறிஞருக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மற்றும் அவரது சிந்திக்கும் ஆற்றலுக்கேற்ப ஒரு விசயத்தைப் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் இருக்கும். அந்த வகையில், ஒரு விசயத்தில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பே!
எனவே ஒரு அறிஞரைப் பற்றித் தீர்ப்பளிப்பதற்கு முன் அவரது அகீதாவை உற்று நோக்க வேண்டும். அந்த அறிஞரின் அகீதா குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஏகத்துவத்தில் அமைந்திருக்குமேயானால், அவர் எந்தமொழி பேசுபவராக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் அல்லது தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரும் நம்முடைய மார்க்க சகோதரராவார் என்பதை நினைவில் இறுத்திக் கொண்டு, எக்காரணத்தைக் கொண்டும் அந்த அறிஞரின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் அந்த அறிஞருக்கு எதிராக நம்முடைய விமர்சனங்கள் இருக்கக்கூடாது.
இருமலின் போது ரத்தம் – புற்றுநோய்க்கான 8 அறிகுறிகள்
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை, ரத்தம், சிறுநீர், ரத்தசோகை மற்றும் உடல் தளர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும். பொதுவாக 200 வகையான புற்றுநோய்கள் உள்ளன.
இதில் குறிப்பாக மலக்குடலில் இருந்து ரத்தம் வெளியாகுதல், இருமலின் போது ரத்தம் வெளிவருதல், மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம், எச்சில் மற்றும் உணவு விழுங்க மிகவும் சிரமப்படுதல், காலம் கடந்து மாதவிடாய் வருதல், சுரப்பிகள் சரி வர வேலை செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட 8 அறிகுறிகள் புற்றுநோய்க்கான தொடக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனே, டாக்டரை சந்தித்து தங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இது ஒரு முன் எச்சரிக்கை மட்டுமே என்று தெளிவுப்படுத்தி உள்ளனர்.
18 ஏப்ரல், 2011
வயிற்றுப்போக்கால் 1.25 லட்சம் குழந்தைகள் பலி- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட் பட்ட - ஏறத்தாழ 1,25,000 குழந்தைகள், ரோடா வைரஸ் கேஸ்ட்ரோ என்டரிட்டிஸ் என்ற கிருமியின் பாதிப்பினால் உண் டாகும் வயிற்றுப்போக்கால் இறப்பதாக மத்திய நோய் கட்டுப் பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவை கூட்டாக இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிருமி பாதிப்பினால் உலகம் முழுவதும் 5லட்சத்து 27 ஆயிரம் குழந் தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றன. இதில் 23 விழுக்காடு மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இந்தியாவில் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றால், தேசிய அளவில் ரோடா கிருமி தடுப்பு மருந்து திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. |
கோடை சுற்றுலாவுக்கு எழில்மிகு பிச்சாவரம்!
சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகளின் ஒரு பகுதி.
சிதம்பரம், ஏப். 18: மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழலாம்.
சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.
15 ஏப்ரல், 2011
இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம் : பல்லடம் சவக்கிடங்கில் சம்பவம்
பல்லடம் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த, பள்ளி மாணவி சடலத்தில், மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்யக் கோரி, உறவினர்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55); கட்டட தொழிலாளி. இவரது மகள் மீனாட்சி (18); குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள, தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு, தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்றார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடினர்.மாலை 4 மணியளவில், அங்குள்ள கிணற்றில், மீனாட்சி பிணமாக மிதப்பதை கண்டுபிடித்த உறவினர்கள், அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு துறையினர், மீனாட்சி பிரேதத்தை மீட்டனர். "கிணற்றுக்கு அருகில் உள்ள செடிகளில் பூப்பறிக்கும்போது, மீனாட்சி தவறி விழுந்து இறந்து இருக்கலாம்' என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55); கட்டட தொழிலாளி. இவரது மகள் மீனாட்சி (18); குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள, தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு, தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்றார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடினர்.மாலை 4 மணியளவில், அங்குள்ள கிணற்றில், மீனாட்சி பிணமாக மிதப்பதை கண்டுபிடித்த உறவினர்கள், அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு துறையினர், மீனாட்சி பிரேதத்தை மீட்டனர். "கிணற்றுக்கு அருகில் உள்ள செடிகளில் பூப்பறிக்கும்போது, மீனாட்சி தவறி விழுந்து இறந்து இருக்கலாம்' என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
நல்ல தீய எண்ணங்களுக்கான கூலி
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
"என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணமிட்டால் (மட்டும்) அதை நீங்கள் பதிவு செய்துவிட வேண்டாம். அவன் அதைச் செயல்படுத்தி விட்டால் ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அதை அவன் செய்து விட்டால் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தன் வானவர்களுக்குக்) கட்டளையிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம்
மோடியை பாராட்டிய ஹசாரே - ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பின்னடைவு !
குஜராத் மாநிலத்தில் காவிப் பயங்கரவாதிகளுடன் இணைந்து இசுலாமியர்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பாராட்டியதன் விளைவாக சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
14 ஏப்ரல், 2011
வாக்காளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற குடும்ப சர்வாதிகார ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் கோப அலைகளோடு வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்ததால் தமிழகமே நேற்றைய தினம் (13-04-2011) எழுச்சியாக இருந்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சந்தையில் விற்ற தீய சக்திகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும்.
கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்!
கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
13 ஏப்ரல், 2011
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்
மயிலாடுதுறை: வாக்காளர்களை காரில் அழைத்து வந்ததை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை தி.மு.க.,வினர் தாக்கினர். மயிலாடுதுறை அடுத்த திருக்களாச்சேரியில், தி.மு.க., வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் கூட்டணி கட்சியினர் நேற்று மாலை 5 மணிக்கு, வாக்காளர்களை காரில் அழைத்து வந்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்தனர். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியத் தலைவர் இதயதுல்லா, செயலர் மொய்னுதீன் ஆகியோர், பொறையார் போலீசில் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் இதயதுல்லா, மொய்னுதீன் இருவரையும் தாக்கினர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
12 ஏப்ரல், 2011
வாக்காளர்களே கவனியுங்கள்: 1 ஓட்டுக்கு ரூ.200 வாங்கினால் ஒரு நாளுக்கு 11 பைசாதான் லாபம்; திருச்சியில் விநியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற தேர்தல் ஆணையத்தால் இதில் வெற்றி பெற முடியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வசதிகேற்ப ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.500 முதல், ரூ.2000 வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் பரிசு பொருட்களும் சப்ளை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவதை பல வாக்காளர்களும் தயங்குவதில்லை. ரூ.200,ரூ.500-க்கு ஆசைப்பட்டு திருச்சியில் 75 வயது மூதாட்டிகள் வரை தேர்தல் பறக்கும் படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை சில கட்சிகளோடு சமூக அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன. திருச்சியில் ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைக்கு புகார் தட்டிவிட சென்னை சேர்ந்த மக்கள் காப்பகம் தனியார் அமைப்பு ஒரு பரபரப்பு விழிப்புணர்வு நோட்டீசை தெரு தெருவாக விநியோகித்து வருகிறது.
அதில் ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வாங்கி ஜனநாயகத்தை விலை பேசும் வாக்காளர்களே சிந்தியுங்கள். நீங்கள் 5 வருடத்துக்காக ஒரு ஓட்டுக்கு ரூ.500 வாங்கினால் ஒரு நாளைக்கு 27 பைசா வாங்குறீர்கள் என்று அர்த்தம். ஒரு ஓட்டுக்கு ரூ.200 வாங்கினால் ஒரு நாளைக்கு 11 பைசா வீதம் 5 வருடத்துக்கு ரூ.200 வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்
ரிசர்வ் வங்கி தற்போது 25 பைசா, 50 பைசாவுக்கு தடை விதித்துவிட்டது எனவே அவைகள் செல்லாது. இந்த நிலையில் ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.200 வாங்குவது தினமும் 11 பைசா, 27 பைசா வாங்குவதற்கு சமம் செல்லாத காசை வாங்குகிறீர்கள்.
தற்போது யாசகம் பெறுகிறவர்கள் கூட 1 ரூபாய்க்கு குறைத்து வாங்குவதில்லை எனவே சிந்தியுங்கள் என அதில் கூறப்பட்டு உள்ளது. திருச்சியில் இந்த நோட்டீசு விநியோகத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே திருச்சியில் தேர்தலையே புறக்கணிக்ககோரி மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் நோட்டீசு ஓட்டியும், சுவர் விளம்பரம் எழுதியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார், வெங்கடேசு உள்பட 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
நன்றி.மாலைமலர்
சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதிக்கு துணை ராணுவம் வருகை
சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து திமுகவின் அராஜகப்போக்கு எல்லை மீறியதால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் சென்னை காவல்துறை கமிஷனர் ஆகியோர்களுக்கு அவசர கோரிக்கை விடப்பட்டது அதில் தொகுதியில் தொடர்ந்து நடைபெற கூடிய பணவினியோகத்தை முற்றிலுமாக தடுக்க தேர்தல் ஆணையத்தால் இயலவில்லை தேர்தல் நாளில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை எடுக்க வேண்டுமென மமக வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார். இதனிடையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் மற்றும் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.
"குல்ஹுவல்லாஹு அஹத்" எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.
"குல்ஹுவல்லாஹு அஹத்"
எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.
அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
ஒருவர்'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.
அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
ஒருவர்'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள்.
அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து,
அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', 'குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள்.
பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள்.
முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
By,
Abdul Hakkeem .R
11 ஏப்ரல், 2011
கீழக்கரை பகுதியில் ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரம்: வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினார்
ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் நேற்று கீழக்கரை பகுதியில் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
மீனவர்கள், தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் ஓட்டு கேட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன். ராமநாதபுரம் தொகுதி மக்கள் விருப்ப படி வேட்பாளராக போட்டி யிடுகிறேன். எனவே அனைத்து சமுதாய மக்களும் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுவரை யாரும் செய்யாத திட்டப்பணிகளை செய்ய காத்திருக்கிறேன். ராமநாத புரம் தொகுதியை ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன். கீழக்கரையில் மருத்துவ மனையில் எந்தவிதமான வசதியும் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலை மாற நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா, மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் முனியசாமி, மாவட்ட அவை தலைவர் வக்கீல் சேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருது பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
நன்றி.மாலைமலர்
15 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி : சேப்பாக்கம் தமிமுன் அன்சாரி நம்பிக்கை
சென்னை : ""கட்ட பஞ்சாயத்தை அடியோடு ஒழிப்பேன்,'' என, சேப்பாக்கம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் தமிமுன் அன்சாரி பேசினார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி, நேற்றைய பிரசாரத்தின் இடையே பேசியதாவது: இங்கு அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி, நான் போகிற இடங்களில் எல்லாம், பிராமணர்கள், செட்டியார்கள், மீனவர்கள், ஆதிதிராவிட இன மக்களும், என்னை ஆதரித்து வரவேற்று பேசுகின்றனர். நான் வெற்றி பெற்றதும், அனைத்து சமுதாய மக்களும், சமுதாய மோதல்கள் ஏதுமின்றி, எப்போதும் இணக்கமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கி தருவேன். தொகுதியில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கொசு தொல்லை, சுகாதார பிரச்னை, போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் இன்மை குறித்த கோரிக்கைகள் தான் அதிகம் வருகின்றன. பிரச்னைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவேன். இத்தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளை நான் அறிவேன். நான் வெற்றி பெற்றதும், தொகுதியில் நிலவும் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் போன்றவற்றை, ராணுவம் போல் செயல்பட்டு, இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க.,வினர் ரவுடி கும்பலை தூண்டிவிட்டுள்ளனர். அதையும் மீறி இறைவன் அருளால், மக்கள் ஆதரவுடன் 15 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார்.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில், 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார்
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே...
தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில், 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார் என்றும் தோல்வியைத் தழுவத் தயாராக இருப்பவர் யார் என்ற நிலவரங்களைக் காட்டும் மெகா ரிசல்ட் ஸ்பெஷல் உங்கள் கைகளில் தவழ்கிறது!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையின் 30 தொகுதிகளில் வெற்றி பெறப்போகும் வெற்றி வேட்பாளரை அறிய, ஜூ.வி-யின் பிரமாண்டமான நிருபர் குழு, தேர்தல் களத்தின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டது.
மூன்று முக்கியமான நெருக்கடிகளை நமது குழு எதிர்கொண்டது!
அதில் முதலாவது... இதுவரை இருந்த 234 தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பிறகு பல விதங்களில் மாறி உள்ளது. 234 என்ற எண்ணிக்கை மாறவில்லையே தவிர... நகரங்களும் கிராமங்களும் வெவ்வேறு தொகுதிகளாக மாறி உள்ளன. எனவே கடந்த கால வெற்றி, தோல்விகளை மையமாக வைத்து... எந்த முடிவுக்கும் வர முடியாது!
அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ... எதிர்க் கட்சிக்கான ஆதரவோ... தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை... இது இரண்டாவது!
பிரகாசத்தில் மெழுகுவர்த்திகள்
இராமநாதபுரம்:
ஆம்பூர்:
'ராஜபக்ஷேவின் நண்பேன்டா’ புகழ் கே.அசன் அலி, காங்கிரஸ் வேட்பாளர். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதி மீனவர்கள் சிங்களக் கடற்படையிடம் உதைபட்டதுதான் மிச்சம். மீனவர்கள் வாக்குகள் இவருக்கு இல்லை. எனவே, இவரை எதிர்ப்பவரான அ.தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெம்பாக உள்ளார். இஸ்லாமியர் வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க... அ.தி.மு.க-வின் ஆதரவும் அமோகம். காங்கிரஸ் எதிர்ப்பும் ம.தி.மு.க.வினரின் மறைமுக ஆதரவும் ஜவாஹிருல்லாவை ஜெயிக்கவைக்கும்!
சேப்பாக்கம் - திருவேல்லிக்கேணி:
கருணாநிதி 'கா’ விட்ட தொகுதி. தி.மு.க-வின் ஜெ.அன்பழகனும், மனிதநேய மக்கள் கட்சியின் எம். தமிமுன் அன்சாரியும் மோதுகிறார்கள். உதயசூரியனுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் இங்கு நிறைந்திருப்பது தி.மு.க-வுக்குப் பலம். முதல்வரின் தொகுதியாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சரிக்குச் சமமாக இஸ்லாமியர்களின் வாக்குகளை லபக்கிக்கொள்வார் தமிமுன் அன்சாரி. அடிப்படை வசதி இன்றி அல்லாடும் நடுநிலை வாக்காளர்கள் தி.மு.க. மீது வெறுப்புடன் இருப்பதால், தமிமுன் அன்சாரி பார்டரில் பாஸ் ஆகிறார்!
ஆம்பூர்:
காங்கிரஸ் சார்பாக ஜெ.விஜய இளஞ்செழியனும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எ.அஸ்லம் பாட்ஷாவும் களத்தில் போட்டி போடுகிறார்கள். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். இதனால், விஜய இளஞ்செழியனுக்கும் பாலூர் சம்பத்துக்கும் கடுமையான போட்டி... இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில். அ.தி.மு.க. கூட்டணி சார்பாகக் களத்தில் நிற்கும் அஸ்லம் பாட்ஷாவுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டக் காற்று!
10 ஏப்ரல், 2011
எப்படி ஓட்டளிப்பது? உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்!
ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் தேர்தல். தேர்தலின் முக்கிய நடவடிக்கை ஓட்டளிப்பது. ஒவ்வொரு குடிமகனும், தவறாமல் இதில் பங்கேற்றால் உண்மையான ஜனநாயகம் தழைக்கும். ஓட்டளிப்பது நமது கடமை. எப்படி ஓட்டளிப்பது என்ற உங்கள் சந்தேகங்களை தீர்க்க இதோ...காலையில் செல்லுங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும். ஆனாலும் உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாகவே ஓட்டுச் சாவடிக்குச் செல்வது நல்லது. இதனால் கடைசி நேர காத்திருப்பை தவிர்க்கலாம்.வரிசையாக நிற்கவும்ஓட்டுச் சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர் என தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்குரிய வரிசையை தேர்வு செய்து அதில் நிற்க வேண்டும்.
ராமநாதபுரம் : ""ராமநாதபுரத்தில் புதிய போக்குவரத்து மண்டலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என, ராமநாதபுரம் ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை, எம்.எஸ்.கே. நகர், பால்கரை, வன்னிக்குடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் உருவாகி நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் ராமநாதபுரத்திற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலை உள்ளது. இதை சரிசெய்ய சரியான முறையில் சட்டசபையில் எதிரொலிக்க செய்ய வேண்டும். ராமநாதபுரம் மக்கள் அதிகமானோர் சென்னை, மதுரை, கோவை, சேலம்,போன்ற நகர்களில் வியாபாரம் செய்கின்றனர். வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக , ராமநாதபுரத்திலும் போக்குவரத்து மண்டலம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். மண்டல அலுவலகம் இல்லாததால் புதிய வழித்தடங்களில் பஸ்கள், கிழக்கு கடற்கரை சாலையில் கூடுதல் பஸ்கள் இயக்குவதில் காலத்தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்வதற்கு ராமநாதபுரத்தில் போக்குவரத்து மண்டலம் அவசியம் அமைக்க வேண்டும். இதற்காக நான் முழு முயற்சி எடுப்பேன். செட்டியார் சமூகத்தினருக்கு உள்ள வியாபார ரீதியாகவும், குடிநீர், சாக்கடை, மின்சாரம், போன்ற பிரச்னைகளும் தீர்க்கப்படும், என்றார். முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் செயலாளர் செல்வம் முன்னிலையில் அச்சங்கத்தினர், ம.ம.க., வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக கூறினர். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அவைத்தலைவர் சேகர், துணை செயலாளர் முனியசாமி, தொகுதி பொறுப்பாளர் முருகேசன், இணை பொறுப்பாளர் தஞ்சி சுரேஷ்குமார், நகர்செயலாளர்கள் அங்குசாமி, துணை செயலாளர் ஆரிப்ராஜா, ஒன்றிய செயலாளர் அசேக்குமார், தே.மு.தி.க., நகர் செயலாளர் முத்தீஸ்வரன் உட்பட பலர் உடன் சென்றனர்.
நன்றி.தினமலர்
அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!!
நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்.
கோவையில் ததஜவால் கலவரம்!
கோவையில் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மோடையில் தமுமுக மற்றும் மமக வை அதுபோல் எஸ் டி பி ஐ தராகுறைவான வார்த்தைகளால் பேசியதை கண்டித்து கோவை பொது மக்கள் ஆவேசம் அடைந்தார்கள்.
பிறகு 5000க்கு மேற்பட்டறோர்கள். அனைத்து இஸ்லாமியா பொதுமக்கள் ஒன்றுகூடி பிரச்சார மேடை நோக்கி சென்று பேச்சை நிறுத்த சொல்ல பிரச்சனை துவங்கிவிட்டது. அங்கும் இங்கும் கை வைக்க துவங்கிவிட்டார்கள். கலவரம் வெடிக்க தகவல் தெரிந்து அனைத்து இயக்க சகோதரர்கள் பொது மக்கள், ஜமாத்தார்கள்ஒன்று கூடி இவர்களுக்கு ஒரு படம் புகட்ட வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள்.
09 ஏப்ரல், 2011
உலக நாடுகள் வியக்கும் அளவு தி.மு.க., ஊழல் : ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சு
ராமநாதபுரம் : ""உலக நாடுகள் பிரமித்து போகும் அளவிற்கு ஊழல் சாதனை படைத்துவிட்டு, எவ்வித கூச்சமுமின்றி மக்கள் மத்தியில் தி.மு.க., ஓட்டு கேட்டு வருவதை பார்த்து உலகமே வியக்கிறது,'' என ,ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். உச்சிப்புளி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்துவிட்டு ஏதும் செய்யாத காங்., எம்.எல்.ஏ., இனி தன்னை தேர்வு செய்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என மக்களை ஏமாற்றுவதில் இறங்கிவிட்டார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி இருந்தால்தான் இணக்கமான சூழல் என கூறிவரும் காங்., மற்ற விஷயங்களிலும் (ஸ்பெக்டரம் ஊழல்) இதேபோல் இணக்கமாகத்தான் இருக்கின்றனர் என்பதை ஒத்துகொள்வது போல் உள்ளது. தொகுதியில் வெள்ளத்தால் பாதித்தபோது மக்களை சந்திக்காதவர் இனி வெற்றி பெற்றால் ,மக்களை நிரந்தர முட்டாள்களாக கருதிவிடுவதற்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடாது. நான் வெற்றிபெற்றால் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன் மீனவர்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்கு தேவையான மீன்பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பேன். ஏற்கனவே ம.ம.க., மக்கள் சேவை செய்து வந்துள்ளநிலையில், எம்.எல்.ஏ.,பதவி கிடைக்கும்பட்சத்தில் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுத்துவதுடன் எங்களது சேவை விரிவடையவும் வாய்ப்பாக அமையும். உலக நாடுகள் பிரமித்து போகும் அளவிற்கு தமிழகத்தில் தி.மு.க., ஊழல் சாதனை படைத்துவிட்டு, எவ்வித கூச்சமுமின்றி மக்கள் மத்தியில் ஓட்டு கேட்டு வருவதை பார்த்து உலகமே வியக்கிறது, என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, தொகுதி பொறுப்பாளர் முருகேசன், இணைபொறுப்பாளர் தஞ்சி சுரேஷ்குமார், தே.மு.தி.க.,முத்தீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
சென்னை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இக்கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. தலைவர் பஷீர் அகமதுகான் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலர் பாத்திமா முசாபர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய செயல்பாடுகள் குறித்தும், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்தும் பேசப்பட்டது. அதன்பின், கட்சி வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., கூட்டணியில்,
கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய செயல்பாடுகள் குறித்தும், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்தும் பேசப்பட்டது. அதன்பின், கட்சி வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., கூட்டணியில்,
இஸ்லாமியர்கள் இதயத்தில் இடம் பிடித்தது யார்?
எஸ்.எம்.பாக்கர், தேசிய தலைவர், தவ்ஹீத் ஜமாஅத் கட்சி. : நான் தான் முஸ்லிம்களின் முதல் நண்பன் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்றும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதியால் நேரடியாக முஸ்லிம்களுக்கு சென்றடையும் திட்டம் ஏதுமில்லை. உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார். வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்., தான் நிலம் கொடுத்து உதவினார். ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார்.
மெழுகுவத்தி பிரகாசமாக ஒளிர்கிறது!
முஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா? என்ற தலைப்பில் ஜீனியர் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரை
08 ஏப்ரல், 2011
காட்டுமன்னார்கோவிலுக்கு துணை ராணுவ படை வருகை
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் 84 பேர் வந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 216 ஓட்டு சாவடிகள் உள்ளது. வரும் தேர்தலில் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கமாண்டர் உமைத் கான் தலைமையில் 84 பேர் பாதுகாப்புப் பணிக்கு வந்துள்ளனர். இவர்கள் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீ முஷ்ணம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதிக்குட்பட்ட முக்கிய நகரங்களில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும் துணை ராணுவத்தினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை, ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல இடங்களில் துணை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் வலம் வர துவங்கியுள்ளதால் பரபரப்படைந்துள்ளது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
தேர்தலில் கதாநாயகன் தேர்தல் கமிஷன்தான் * ம.ம.க."சர்ட்டிபிகேட்'
தென்காசி : "தேர்தலில் கதாநாயகன் என்றால் அது தேர்தல் கமிஷன் தான்' என மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஹைதர்அலி கூறினார்.
தென்காசி தொகுதி அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் சரத்குமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ம.ம.க.பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:""தேர்தலில் கதாநாயகன் என்றால் அது தேர்தல் கமிஷன்தான். சிறந்த முறையில், பாகுபாடின்றி தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசு ஊழியர்கள்தான். மதுரை கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன் நேர்மையாக, அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் செயல்படுகின்றனர். பல இடங்களில் பல அதிகாரிகள் அச்சுறுத்தலால் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.திருச்சியில் தனியார் ஆம்னி பஸ்சில் இருந்து பல கோடி ரூபாயை அப்பகுதி தேர்தல் அதிகாரி சங்கீதா கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். இந்த பஸ் உரிமையாளர் உதயகுமார், அவரது மகன் அருண்பாலாஜி அமைச்சர் நேருவுக்கு உறவினர். முறையான பெர்மிட் பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பல கோடி ரூபாய் பல்வேறு இடங்களுக்கு இந்த பஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோல் இருந்தால் தமிழகத்தில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். 234 தொகுதிகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. மதுரை கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன், திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவிற்கு போதிய பாதுகாப்பினை வழங்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி தொகுதி அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் சரத்குமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ம.ம.க.பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:""தேர்தலில் கதாநாயகன் என்றால் அது தேர்தல் கமிஷன்தான். சிறந்த முறையில், பாகுபாடின்றி தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசு ஊழியர்கள்தான். மதுரை கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன் நேர்மையாக, அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் செயல்படுகின்றனர். பல இடங்களில் பல அதிகாரிகள் அச்சுறுத்தலால் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.திருச்சியில் தனியார் ஆம்னி பஸ்சில் இருந்து பல கோடி ரூபாயை அப்பகுதி தேர்தல் அதிகாரி சங்கீதா கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். இந்த பஸ் உரிமையாளர் உதயகுமார், அவரது மகன் அருண்பாலாஜி அமைச்சர் நேருவுக்கு உறவினர். முறையான பெர்மிட் பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பல கோடி ரூபாய் பல்வேறு இடங்களுக்கு இந்த பஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோல் இருந்தால் தமிழகத்தில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். 234 தொகுதிகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. மதுரை கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன், திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவிற்கு போதிய பாதுகாப்பினை வழங்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொத்தத்தில் மெழுகுவத்தி... பிரகாசமாக ஒளிர்கிறது! ராமநாத புரம் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் பேரா எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் இன்ஷாஅல்லாஹ் வெற்றி நிச்சயம்
ம.ம.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாவை எதிர்த்து, தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அசன் அலி களத்தில் இருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரான அசன் அலியும், கடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தொகுதியில் தலை காட்டுவதால், மக்களின் கேள்விகளுக்குப...் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மேலும் இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் இவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் ஓட்டுகள் கணிசமாக ஜவாஹிருல்லாவுக்குத்தான். சில மாதங்களுக்கு முன்பு பெரிய பட்டணத்தில் நடந்த படகு விபத்தில் சிலர் இறந்தனர். ''இது என் தொகுதிக்குள் இல்லை!'' என்று அசன் அலி ஒதுங்கிக்கொண்டார். அந்த சம்பவம் குறித்து அங்கே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி, ''பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாகத் தர வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்து, ஆம்புலன்ஸ் சேவையிலும் ஈடுபட்டார் ஜவாஹிருல்லா. ''ரத்த தானம் செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறோம். சுனாமி சமயத்தில் நாங்கள் ஆற்றிய மீட்புப் பணிகளை மக்கள் மறக்க மாட்டார்கள்!'' என்று ம.ம.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்கிறார்கள். பிரசாரத்தில் பேசும் ஜவாஹிருல்லா, ''பம்மன் வைப்பாறு திட்டம், கடலில் கலக்கும் நீரைத் தடுத்து தடுப்பு அணைகள் கட்டுதல், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையை மேம்படுத்துதல், பாதாள சாக்கடைத் திட்டம், ராமேஸ்வரம் புனிதத் தலத்துக்கு அடிப்படை வசதிகள் செய்தல், கச்சத் தீவு மீட்பு, மீனவர் உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை நிச்சயம் செய்து காட்டுவோம்...'' என்கிறார். மொத்தத்தில் மெழுகுவத்தி... பிரகாசமாக ஒளிர்கிறது
அஸ்லம் பாஷா வெற்றி பெறலாம் - குமுதம் ரிப்போர்ட்டர் தொகுதி நிலவரம்
குமுதம் ரி்ப்போர்டரின் பைனல் ரிசல்டில் விறுவிறுப்பான தொகுதி நிலவரம் என்ற தலைப்பில் தமிழக மக்களின் மனநிலையை அறிந்து மெகா சர்வே முடிவுகள் அதில் ஆம்பூர் தொகுதி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பாக முன்னாள் எம்.பி மறைந்த ஜெயமோகனின் மகன் விஜய இளம்செழியனும், அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவும் முக்கிய வேட்பாளர்கள். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் காங்கிரஸ் ஓட்டுகள் பிரிந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அஸ்லாம் பாஷா வெற்றி பெறலாம்.
07 ஏப்ரல், 2011
கிராமங்களை பசுமை புரட்சியாக்குவேன்; ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சு
மதுரை, ஏப். 7-
ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் நேற்று கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். கொளுத்தும் வெயிலில் அவர் வீதி, வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க.,-காங்.,துரோகம் : ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா ஆவேசம்
ராமநாதபுரம் : "" சிறுபான்மை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்.,-தி.மு.க., என இரண்டு கட்சிகளும் நிறைவேற்றாமல் துரோகம் செய்ததற்கு பாடம் கற்பிக்க வேண்டும்,'' என ,ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார். கீழக்கரை ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஓட்டு சேகரித்த அவர் ,கீழக்கரை மற்றும் சுற்றுபகுதிகளில் பிரசாரத்தின் போது பேசியதாவது: சிறுபான்மை மக்களுக்கு காங்., தி.மு.க., துரோகம் இழைத்துவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்ற இரு கட்சிகளும் தவறிவிட்டன. 2004 லோக்சபா தேர்தலின்போது சிறுபான்மை மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, காங்.,- தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறின. ஆட்சி அமைத்தபின் சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க , நீதிபதி ரெங்கநாத்மிஸ்ரா தலைமையில் தேசிய கமிஷன் அமைக்கப்பட்டது. மிஸ்ரா கமிஷன் ஆய்வு நடத்தி பரிந்துரையை 2007ல் சமர்பித்தது. ஆனால் அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்ய அரசு தவறிவிட்டது.
2009ல் மீண்டும் லோக்சபா தேர்தல் நடைபெற்றபோது அனைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென காங்., -தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின் மிஸ்ரா அறிக்கையை பார்லி.,யில் தாக்கல் செய்ய தி.மு.க.,-காங்., மறுத்துவிட்டது. கடைசியாக 2009 டிசம்பரில் தான் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. மிஸ்ரா கமிஷன் மதவழி சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பரிந்துரை செய்தது. மிஸ்ரா கமிஷன் அறிக்கையை பார்லி.,யில் தாக்கல் செய்து ஒராண்டுக்கு மேலாகியும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த தி.மு.க., மற்றும் காங்., தலைவர்களிடம் பலமுறை முறையிட்டும் ,யார் காதிலோ ஊதிய சங்கு போல் ஆகிவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ,தி.மு.க.,- காங்.,க்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் , என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, நகர் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முனியாண்டி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா,நகர் செயலாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் மகாலிங்கம், இந்திய கம்யூ.,ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி நகர் செயலாளர் கஜேந்திரன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முசமில், ம.ம.க., மாவட்ட தலைவர் சலிமுல்லாகான், மாவட்டசெயலாளர் அன்வர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி.தினமலர்
2009ல் மீண்டும் லோக்சபா தேர்தல் நடைபெற்றபோது அனைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென காங்., -தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின் மிஸ்ரா அறிக்கையை பார்லி.,யில் தாக்கல் செய்ய தி.மு.க.,-காங்., மறுத்துவிட்டது. கடைசியாக 2009 டிசம்பரில் தான் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. மிஸ்ரா கமிஷன் மதவழி சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பரிந்துரை செய்தது. மிஸ்ரா கமிஷன் அறிக்கையை பார்லி.,யில் தாக்கல் செய்து ஒராண்டுக்கு மேலாகியும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த தி.மு.க., மற்றும் காங்., தலைவர்களிடம் பலமுறை முறையிட்டும் ,யார் காதிலோ ஊதிய சங்கு போல் ஆகிவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ,தி.மு.க.,- காங்.,க்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் , என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, நகர் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முனியாண்டி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா,நகர் செயலாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் மகாலிங்கம், இந்திய கம்யூ.,ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி நகர் செயலாளர் கஜேந்திரன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முசமில், ம.ம.க., மாவட்ட தலைவர் சலிமுல்லாகான், மாவட்டசெயலாளர் அன்வர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி.தினமலர்
தேர்தல் அறிக்கை பற்றிப் பேச காதர் மைதீனுக்கு அருகதை இல்லை! திமுக-காங்கிரஸ் கட்சிகளிடம் இனியும் முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்!!
தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும்; முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்படும்; ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்படும்; முஸ்லிம் ஜமாஅத்துகள் வழங்கும் திருமணப் பதிவுச் சான்றிதழை (தஃப்தர்) சட்டப்பூர்வமாக ஏற்கப்படும் - ஆகிய வாக்குறுதிகளை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணியின் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அளித்துள்ளார். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களிடமும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்தத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளது.
முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும்; முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்படும்; ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்படும்; முஸ்லிம் ஜமாஅத்துகள் வழங்கும் திருமணப் பதிவுச் சான்றிதழை (தஃப்தர்) சட்டப்பூர்வமாக ஏற்கப்படும் - ஆகிய வாக்குறுதிகளை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணியின் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அளித்துள்ளார். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களிடமும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்தத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளது.
ஆம்பூர் பிரச்சாரக் காட்சிகள்
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அஸ்லம் பாட்ஷா வாக்குகளைச் சேகரிக்கும் காட்சி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)